உலகக் கோப்பை போட்டிகளில் தண்ணீர் பாட்டில்களுக்குத் தடை – FIFA அமைப்பைக் கடுமையாகச் சாடிய றொரண்டோடோ மேயர்!

உலகக் கோப்பை காற்பந்து போட்டிகளைக் காண்பதற்குக் மைதானத்திற்குள் வரும் ரசிகர்கள், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் போத்தல்களைக் (Reusable Water Bottles) கொண்டு வருவதற்கு FIFA அமைப்பு தடை விதித்துள்ளது.

இந்த அதிரடி முடிவானது “முற்றிலும் பணப் பறிப்பு நடவடிக்கை” (Pure money grab) என றொரண்டோடோ (Toronto) நகர மேயர் Olivia Chow கடுமையாகச் சாடியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “FIFA ஏற்கனவே பில்லியன் கணக்கில் சம்பாதித்து வருகிறது; இது முற்றிலும் அநியாயமானது. சுற்றுச்சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் சொந்தப் போத்தல்களைக் கொண்டு வருவதே நல்லது என சாடியுள்ளார்.

இதற்குப் பதிலாக மைதானத்திற்குள் றொரண்டோடோ நகரத்தின் சுத்தமான குடிநீருடன் கூடிய இலவச போத்தல்களை ரசிகர்களுக்கு FIFA வழங்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

நகர சபை உறுப்பினர் Josh Matlow மற்றும் றொரண்டோடோ சுற்றுச்சூழல் கூட்டமைப்பு (Toronto Environment Alliance) ஆகியோரும் இந்தத் தடைக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வீரர்களினதும் ரசிகர்களினதும் பாதுகாப்பு மற்றும் வெப்பத் தணிப்பு நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக FIFA தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

றொரண்டோடோ ஸ்டேடியத்தில் (Toronto Stadium – BMO Field) ஜூன் 12 அன்று முதலாவது உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ள பின்னணியில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles