கனடா நோர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூடு – 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பலி!

கனடா (Canada) றொரண்டோ (Toronto) நகரின் நோர்த் யார்க் (North York) பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நோர்த் யார்க்கின் ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் (Sheppard Avenue West) மற்றும் மெகல்லன் டிரைவ் (Magellan Drive) பகுதிக்கு அருகில், இரவு 10 மணிக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக றொரண்டோ பொலிஸார் (Toronto Police) தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த இளைஞரை மீட்டு, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் மற்றும் பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர் அல்லது நபர்கள், கறுப்பு நிற வாகனத்தில் தப்பியோடியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 416-808-3100 என்ற எண்ணில் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles