கனடா (Canada) றொரண்டோ (Toronto) நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘பேர்மாண்ட் ராயல் யார்க்’ (Fairmont Royal York) ஹோட்டலில், சனிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை 5:30 மணியளவில் ஹோட்டலின் துணி துவைக்கும் பகுதிக்குச் செல்லும் பாதையில் (laundry chute) தீப்பிடித்ததாகத் தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
உடனடியாக ஹோட்டலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இந்த ஹோட்டலில் அன்று காலை 11:30 மணிக்கு திருமணம் செய்யவிருந்த மணமக்கள் இருவர், அதிகாலையிலேயே திருமண ஆடையுடன் வெளியேற வேண்டியதாயிற்று.
எனினும், “தங்கள் திருமண நாளில் நடந்த இந்த சம்பவம், காலத்திற்கும் பேசப்படும் ஒரு சுவாரசியமான கதையாக மாறிவிட்டது” என அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, காலை 7:30 மணியளவில் விருந்தினர்கள் அனைவரும் மீண்டும் ஹோட்டலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மணமக்களின் திருமணமும் திட்டமிட்டபடி சுமுகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
