FIFA உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிக் காலத்தில், ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் மதுபானச்சாலைகள் அதிகாலை 4 மணி வரை மதுபானங்களை விற்பனை செய்ய போர்ட் அரசாங்கம் (Ford government) அனுமதி வழங்கவுள்ளது.
ஜூன் 11 முதல் ஜூலை 19 வரையான இத்தொடரின் போது, வணிகங்களை ஊக்குவிக்கவும், விருந்தோம்பல் துறை ஊழியர்களுக்கு ஆதரவளிக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அதிகாலை 2 மணி வரை மட்டுமே மதுபானம் விற்க அனுமதி உள்ள நிலையில், இம்முறை AGCO அமைப்பிடம் சிறப்பு அனுமதிப்பத்திரம் எதையும் பெறாமலேயே அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் அதிகாலை 4 மணி வரை இயங்க முடியும்.
அத்துடன், றொரண்டோ (GTA) மற்றும் ஒட்டாவா (Ottawa) ஆகிய பகுதிகளில் உள்ள 27 LCBO விற்பனை நிலையங்களின் வேலை நேரமும் நீடிக்கப்படவுள்ளது.
ரசிகர்கள் இப்போட்டிகளை முழுமையாகக் கொண்டாடுவதற்கும், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த முடிவு பெரிதும் உதவும் என மாகாண சட்டமா அதிபர் டக் டவுனி (Doug Downey) தெரிவித்துள்ளார்.
