கனடாவில் ஹண்டாவைரஸ் (Hantavirus) பரவல் – அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் சோதனைகளைத் தொடங்கியது ஒண்டாரியோ!

எலி மற்றும் பிற சுண்டெலிகள் மூலம் பரவக்கூடிய ஹண்டாவைரஸ் (Hantavirus) தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒண்டாரியோ (Ontario) சுகாதார அமைச்சகம் அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கும் (Asymptomatic) மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இந்தத் தொற்று பாதிப்புக்குள்ளான உல்லாசக் கப்பல் (Cruise) மற்றும் விமானப் பயணிகளுடன் தொடர்புடையவர்களுக்கு இந்தச் சோதனைகள் வழங்கப்படுகின்றன.

‘அதி-ஆபத்து’ (High-risk) பிரிவிலுள்ள மூன்று பயணிகள் சோதன முடிவு எப்படி வந்தாலும் கட்டாயம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.

ஆனால், ‘குறைந்த ஆபத்து’ (Low-risk) பிரிவிலுள்ள 7 பயணிகள் பரிசோதனையில் தொற்று இல்லை (Negative) எனத் தெரியவந்தால், தங்களது 45 நாள் தனிமைப்படுத்தலை நிறுத்திக்கொள்ளலாம்.

ஹண்டாவைரஸின் அடைகாக்கும் காலம் (Incubation period) நீண்டது என்பதால், ஆரம்பத்தில் தொற்று இல்லை என வந்தாலும் பின்னர் அது பாசிட்டிவ் ஆக மாறலாம்.

எனவே இந்தச் சோதனைகள் மக்களுக்கு ஒரு போலிப் பாதுகாப்ப உணர்வைத் தந்துவிடக் கூடாது என கனடாவின் தலைமை பொதுச் சுகாதார அதிகாரி டாக்டர் ஜோஸ் ரெய்மர் (Dr. Joss Reimer) எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) படி, சர்வதேச அளவில் இதுவரை 10 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மே 2 ஆம் திகதிக்குப் பின்னர் புதிய மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒண்டாரியோ சுகாதார அமைச்சர் சில்வியா ஜோன்ஸ் (Sylvia Jones) தலைமையிலான குழுவினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles