பனிக்கட்டியால் உறைந்த கனடாவின் சி.என் டவர்!

பிரபல ராப் கலைஞர் டிரேக் (Drake) தனது புதிய ஆல்பமான ஐஸ்மேன்‘ (Iceman) வெளியீட்டை முன்னிட்டு, ரொறன்ரோவின் அடையாளமான சி.என் டவரை (CN Tower) ஒரு பிரம்மாண்டமான கலைக்கூடமாக மாற்றியுள்ளார்.

வியாழக்கிழமை இரவு 9:45 மணியளவில் தொடங்கப்பட்ட சிறப்பு ஒளிப்பதிவு (Projection) மூலம், 553 மீற்றர் உயரமுள்ள சி.என் டவர் (CN Tower) முழுவதும் பனிக்கட்டியால் உறைந்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை டிரேக் ஏற்படுத்தினார்.

விஷுவல் ஆல்பம்‘ (Visual album) என்று அழைக்கப்படும் இந்த புதிய இசைத்தொகுப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் டிரேக்கின் எண்ணங்கள் மற்றும் அனுபவங்களின் நாடக வெளிப்பாடாக உருவாக்கப்பட்டுள்ளது.

நேரலை ஒளிபரப்பைத் தொடர்ந்து, ஹார்பர்பிரண்ட் சென்டரில் (Harbourfront Centre) இருந்து 10 நிமிட வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ரொறன்ரோவின் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான பனிச்சிற்பத்தை தீயணைப்பு வீரர்கள் உருக்கி, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆல்பம் வெளியீட்டுத் திகதியைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய சொந்த ஊரான ரொறன்ரோவை மையப்படுத்தி டிரேக் மேற்கொண்டு வரும் இந்த வித்தியாசமான விளம்பர உத்திகள் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles