தனியார் விமான விவகாரம் – ஒண்டாரியோ வரி செலுத்துவோருக்கு $200,000 இழப்பு!

ஒண்டாரியோ (Ontario) முதல்வர் டக் போர்டு (Doug Ford) பயன்பாட்டிற்காக $28.9 மில்லியன் மதிப்புள்ள தனியார் விமானத்தை வாங்கி, பின்னர் மீண்டும் விற்பனை செய்யப்பட்டது.

சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் வரி செலுத்துவோரின் பணம் சுமார் $200,000 செலவிடப்பட்டுள்ளதாக புதிய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘பொம்பார்டியர் சேலஞ்சர் 650’ (Bombardier Challenger 650) ரக விமானத்தை 21 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மாகாண அரசு வாங்கியது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தத் தகவல் வெளியானதும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, சில நாட்களிலேயே அந்த விமானத்தை வாங்கிய அதே விலைக்கே மீண்டும் பொம்பார்டியர் (Bombardier) நிறுவனத்திடம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

விமானத்தை அதே விலைக்கு விற்றாலும், அதன் பராமரிப்பு, சேமிப்பு, சட்ட ஆலோசனை மற்றும் விமானம் வாங்குவதற்கான தொழில்நுட்ப ஆதரவு என மொத்தம் $190,865.56 செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை “கிரேவி பிளேன்” (Gravy Plane) என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சிக்கின்றனர்.

மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் திணறி வரும் வேளையில், வரி செலுத்துவோர் பணத்தில் இத்தகைய ஆடம்பரச் செலவுகள் தேவையற்றது என விமர்சித்துள்ளனர்.

முதல்வரின் பாதுகாப்பான மற்றும் நெகிழ்வுத்தன்மையான பயணங்களுக்காகவே இந்த விமானம் வாங்கத் திட்டமிடப்பட்டதாக அவரது அலுவலகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

ஏப்ரல் 15 அன்று வாங்கப்பட்ட இந்த விமானம் ஏப்ரல் 27 அன்று மீண்டும் விற்கப்பட்டது.

இந்த விவகாரம் தற்போது ஒண்டாரியோ அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles