ஸ்காபரோவில் 2 வயதுக் குழந்தை கொலை வழக்கில் – தாயார் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது!

றொரண்டோவின் ஸ்காபரோ (Scarborough) பகுதியில், இரண்டு வயதை எட்டவிருந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பதிவானது.

தற்போது அக்குழந்தையின் தாயார் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட குழந்தை ஓரியானா சோ (Oriana Cho) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சிறுமி செவ்வாய்க்கிழமை காலை மிட்லாண்ட் அவென்யூ (Midland Avenue) மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் (Steeles Avenue East) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, புதன்கிழமை அன்று உயிரிழந்ததாக பொலிஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சிறுமி இந்த ஆண்டில் ரொறன்ரோவில் பதிவான எட்டாவது கொலைப் பலியாவார்.

இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரான 37 வயது சி டிங் யாங் (Si Ting Yang) கைது செய்யப்பட்டு, அவர் மீது முதலாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை அளித்த 911 அழைப்பைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த போது தந்தை வீட்டில் இருக்கவில்லை. வீட்டில் இருந்த மற்றுமொரு குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் அல்லது நோக்கம் குறித்து பொலிஸார் தற்போது விபரங்களை வெளியிடவில்லை.

இந்தத் துயரச் சம்பவம் முதலுதவி வழங்கிய பொலிஸார் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் மத்தியிலும் பெரும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles