றொரண்டோவில் யூத சமூகத்தினர் மீது போலித் துப்பாக்கிச் சூடு – 18 வயது இளைஞர் கைது!

றொரண்டோவில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து, போலித் துப்பாக்கியால் (Replica firearm) சுட்ட சம்பவங்கள் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வான் (Vaughan) பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ரஸ்லான் நோவ்ருசோவ் (Ruslan Novruzov) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து இரண்டு ‘ஜெல் பிளாஸ்டர்’ (Gel blaster) வகை போலித் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை இரவு நார்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே நின்றிருந்த மூவர் மீது, ஓடும் வாகனத்திலிருந்து போலித் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.

இதே நபர் கடந்த ஏப்ரல் 30 அன்றும் பாத்தர்ஸ்ட் ஸ்ட்ரீட் (Bathurst Street) பகுதியில் இவ்வாறான தாக்குதலை நடத்தியதாகப் பொலிஸார் நம்புகின்றனர்.

இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன. நீல நிற Lexus SUV ரக வாகனத்தைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

யூத சமூகத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடன் இவை நடத்தப்பட்டுள்ளதால், இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட குற்றமாக (Hate-motivated offence) விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) மற்றும் றொரண்டோ  ​மேயர் ஒலிவியா சௌ (Olivia Chow) ஆகியோர் இந்தச் செயலை “அருவருப்பானது” எனக் கண்டித்துள்ளார்.

அதேபோல் யூத எதிர்ப்புக் கொள்கையை (Antisemitism) ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோவில் அண்மைக்காலமாக யூத சமூகத்தினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகப் பார்க்கப்படுகிறது.

Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45

Related Articles

Latest Articles