கனடா மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026 – வாடகைக்கு குடியிருப்போருக்கு முக்கிய தகவல்கள்!

கனடாவில் 2026 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

வாடகைக்கு குடியிருப்போர் (Tenants) இது குறித்து அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

மே 4 ஆம் திகதி முதல் தரவு சேகரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

பெரும்பாலான வீடுகளுக்கு இதற்கான படிவங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

75 சதவீத வீடுகளுக்கு அடிப்படை தகவல்களைக் கோரும் சிறிய படிவங்களும் (Short form), 25 சதவீத வீடுகளுக்கு விரிவான சமூக-பொருளாதார தகவல்களைக் கோரும் நீண்ட படிவங்களும் (Long form) அனுப்பப்படும்.

வாடகைக்கு குடியிருப்போர் தங்கள் வீட்டிற்கென வரும் படிவத்தை தாங்களே பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒரு வீட்டில் பல பிரிவுகள் (உதாரணமாக: Basement, First floor) இருந்தால், ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் மிகவும் இரகசியமானவை. உங்கள் வீட்டு உரிமையாளருக்கோ (Landlord) அல்லது குடிவரவு மற்றும் வரி திணைக்களங்களுக்கோ இந்த விபரங்கள் பகிரப்பட மாட்டாது.

கனடாவில் வசிக்கும் அனைவரும் இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்பது சட்டப்படி கட்டாயமாகும்.

படிவத்தை பூர்த்தி செய்யத் தவறினால் அல்லது தவறான தகவல்களை வழங்கினால் 500 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

புள்ளிவிபரக் கனடா (Statistics Canada) மூலம் வழங்கப்படும் 16 இலக்க பாதுகாப்பு குறியீட்டைப் பயன்படுத்தி இணையதளம் வாயிலாக இத்தகவல்களை இலகுவாகப் பதிவேற்ற முடியும்.

Video thumbnail
வீட்டை நேரில் பார்த்தும் Rental Scam-ல் சிக்க முடியுமா? — ஆம்!
01:11
Video thumbnail
2020-ல் உங்கள் CRA account hack செய்யப்பட்டதா? உங்களுக்கு $5,000 வரை கிடைக்க வாய்ப்பு இருக்கலாம்!
01:07
Video thumbnail
ஒரு Seatbelt காரணமாக முழு விமானமும் ரத்தாகுமா? — Victoria-வில் அதுதான் நடந்துள்ளது!
01:00
Video thumbnail
றொரொண்டோவில் மட்டுமல்ல—கல்கரியிலும் ரக்கூன்களின் நடமாட்டம் அதிகரிக்கிறதா?
01:11
Video thumbnail
நள்ளிரவு பொலிஸ் நடவடிக்கை… சில நிமிடங்களில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு!
01:33
Video thumbnail
Facebook, Instagram சிறுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதா?
01:33
Video thumbnail
Weekend Plan இருக்கிறதா? வெளியே புறப்படுவதற்கு முன் Scarborough வானிலையை பாருங்கள்!
01:01
Video thumbnail
Toronto Zoo-வுக்கு வந்துள்ள புதிய குட்டி விருந்தினர்!
00:43
Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45

Related Articles

Latest Articles