எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுக – கடும் நிபந்தனையும் விதித்த பின் அமெரிக்காவை கிண்டலடித்த மனிடோபா முதல்வர்!

அமெரிக்கா கனடியப் பொருட்கள் மீது விதித்துள்ள அனைத்து வரிகளையும் (Tariffs) நீக்கினால் மட்டுமே, அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை மேனிடோபா (Manitoba) மாகாணம் விலக்கும் என அதன் முதல்வர் வாப் கினியூ (Wab Kinew) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 2025 முதல் மேனிடோபாவில் அமெரிக்க மதுபானங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

பேச்சுவார்த்தையில் ஒரு பலமான கார்டாக இதைப் பயன்படுத்துவதாக முதல்வர் கினியூ (Kinew) குறிப்பிட்டுள்ளார்.

வரிகளை நீக்குவதுடன், சர்ச்சைக்குரிய ஜாக் எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான அனைத்து இரகசியக் கோப்புகளையும் அமெரிக்க அரசு வெளியிட வேண்டும் என்றும் அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மற்றும் எப்ஸ்டீன் இடையிலான தொடர்புகளைக் கனடியப் பேச்சுவார்த்தையாளர்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2030-ஆம் ஆண்டிற்குள் சர்ச்சில் துறைமுகம் வழியாக திரவ இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றுமதி செய்ய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இது வடபகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை இத்தகைய பாரிய திட்டங்கள் குறைக்கும் என மேனிடோபா முதல்வர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Video thumbnail
தாய் ஒருவர் உட்பட 4 உயிர்களைப் பறித்த விபத்து!
01:28
Video thumbnail
பிராம்ப்டனின் புதிய முகம் - மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மையமாக மாறும் மாநகரம்!
01:21
Video thumbnail
பிராம்ப்டன் பாடசாலையில் கத்திக்குத்து - மாணவருக்கு காயம்!
01:21
Video thumbnail
சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல் – சிறைக்காவலர் சத்தியகாந்தனுக்கு 26 மாத சிறைத்தண்டனை!
01:15
Video thumbnail
FIFA உலகக்கோப்பை டிக்கெட் விற்பனை - மணிநேரக் காத்திருப்பால் ரசிகர்கள் கடும் அதிருப்தி!
01:14
Video thumbnail
ஹாமில்டனில் பரபரப்பு: கைவிலங்குடன் பொலிஸ் பிடியிலிருந்து தப்பியோடிய இளைஞர்!
00:50
Video thumbnail
ஆன்லைன் பயங்கரவாத வலையில் சிக்கிய சிறுமி! - '764' குழுமம் குறித்து தந்தை பகீர் எச்சரிக்கை!
01:26
Video thumbnail
விமான எரிபொருள் தட்டுப்பாடு - கனடியர்களின் கோடைகால பயணங்களில் திடீர் மாற்றம்!
01:07
Video thumbnail
றொரண்டோவில் இந்தியர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!
01:07
Video thumbnail
றொரண்டோ வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகாயம்!
01:01

Related Articles

Latest Articles