அரசியல் ஆதாயத்திற்காக மதச் சின்னங்களைப் பயன்படுத்த வேண்டாம்! ட்ரம்பிற்கு கனடிய ஆயர்கள் கண்டனம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போப் லியோ XIV  ஆகியோரிமை யே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இயேசு கிறிஸ்துவைப் போன்ற பிம்பங்களை அரசியல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியதற்கு ட்ரம்பிற்கு, கனடிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (Canadian Conference of Catholic Bishops) கண்டனம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு நாட்டின் அரசியல் விவகாரங்களிலும் தலையிட விரும்பவில்லை என்றாலும், அரசியல் தலைவர்களை இயேசு கிறிஸ்துவுடன் ஒப்பிட்டு பிம்பங்களை உருவாக்குவது மரியாதையற்ற செயல் என்பதையும் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இது நம்பிக்கையையும் அரசியல் அதிகாரத்தையும் குழப்புவதாகவும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் (Iran) மீதான தாக்குதல் மற்றும் போர் குறித்து போப் லியோ XIV முன்வைத்த விமர்சனங்களுக்குப் பிறகு, ட்ரம்ப் அவரைத் தனது சமூக வலைத்தளங்களில் கடுமையாகச் சாடி வருகிறார்.

போப் லியோ, போரினால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காகக் குரல் கொடுப்பதை ஒரு ஆன்மீக கடமைஎன்று முன்வைத்துள்ளார்.

போப்பின் அமைதி முயற்சிகளுக்கு இங்கிலாந்து திருச்சபையின் தலைவரான பேராயர் சாரா முல்லலி (Archbishop Sarah Mullally) தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

போர் மற்றும் வன்முறைக்கு எதிராகப் போப் லியோ XIV எடுத்து வரும் அமைதி முயற்சிகள் மனிதாபிமான அடிப்படையிலானவை எனவே, அதற்கு ஆதரவாகக் கனடிய மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளன

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles