பத்தாண்டுகால உயிரிழப்புகள் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் 18,000 உயிர்களைப் பறித்த போதைப்பொருள் நெருக்கடி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த பொதுச் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதியுடன் பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 18,000-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையினால் உயிரிழந்துள்ளதாகப் பேரதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நெருக்கடியானது 2016-ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட போது ஆண்டுக்கு 474 ஆக இருந்த மரணங்கள், தற்போது ஒரு நாளைக்குச் சராசரியாக 5 பேர் என்ற ளவிஅல் உயர்ந்துள்ளது.

குறிப்பாக, அதிக வீரியம் கொண்ட பெண்டானில் (Fentanyl) மற்றும் கார்பெண்டானில் (Carfentanil) போன்ற செயற்கை ஓபியாய்டுகளின் வருகையே இந்த மரணங்களுக்கு முக்கிய காரணமாகும்.

உயிரிழந்தவர்களில் 14 வயது சிறுமி எம்மி லியூ (Emmy Liu) முதல் 20 வயது பிராண்டன் ஜான்சன் (Brandon Jansen) வரை பல இளைஞர்கள் அடங்குவர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த மாகாண அரசு கொண்டு வந்த தண்டனை நீக்கம்‘ (Decriminalization) மற்றும் பாதுகாப்பான விநியோகம்‘ (Safer Supply) போன்ற பரிசோதனை முயற்சிகள் போதிய பலனைத் தரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2023 இல் உயிரிழப்புகள் 2,590 ஆக உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து, தற்போது அரசு தனது கொள்கைகளை மாற்றி வருகிறது.

இதன்படி, அனுமதியின்றி போதைப்பொருள் வைத்திருப்போருக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகுறது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டாயச் சிகிச்சை (Involuntary Care) வழங்கும் புதிய சட்ட மாற்றங்களையும் பிரீமியர் டேவிட் ஈபி (David Eby) தலைமையிலான அரசு அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles