இன்ஸ்டாகிராம் ஊடாக கள்ளநோட்டு விற்பனை!

இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக வலைதளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு, கனடா முழுவதும் கள்ளநோட்டுக்களை விற்பனை செய்து வந்த ஒரு பாரிய குற்ற கும்பலை ஹால்டன் பிராந்திய பொலிஸார் (Halton Regional Police) முறியடித்துள்ளனர்.

‘புராஜெக்ட் மிராஜ்’ (Project Mirage) என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் 60,000 டொலர்களுக்கும் அதிகமான இணையவழி விற்பனை தடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இந்த விசாரணையில், சினிமா படப்பிடிப்பிற்கான போலி பணம் (Film prop money) என்ற போர்வையில் கள்ளநோட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

கடந்த மார்ச் 31, 2026 அன்று றொரண்டோவில் உள்ள மூன்று வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், கள்ளநோட்டுக்கள் மட்டுமன்றி தங்கக்கட்டி, மடிக்கணினிகள் மற்றும் கோகோயின் (Cocaine), மெத்தாம்பேட்டமைன் (Methamphetamine) உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக டொராண்டோவைச் சேர்ந்த ரபி அகமது (Rafi Ahmed – 23), ஷாபி அகமது (Shafi Ahmed – 24), லெவென்டே க்ளோன்சி (Levente Glonczi – 21) மற்றும் டேவிட் ஹோ (David Ho – 29) ஆகியோர் மீது மோசடி மற்றும் கள்ளநோட்டு புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மேலும், ஜேசன் ஹோ (Jason Ho – 31) மற்றும் தான் புய் (Thanh Bui – 29) ஆகியோர் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர்.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles