கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் ஈஸ்டர் வார இறுதியில் காணாமல் போன இரு சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்கள் உதவுமாறு பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிரீன்வுட்-காக்ஸ்வெல் (Greenwood-Coxwell) சுற்றுப்புறத்தில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெளியேறிய 11 வயதுடைய கசாண்ட்ரா (Cassandra) மற்றும் 14 வயதுடைய அலியா (Aliyah) ஆகிய இரு சகோதரிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
11 வயது கசாண்ட்ரா (Cassandra) ஐந்து அடி மூன்று அங்குல உயரமும், மெலிந்த உடலமைப்பும், சிவப்பு நிற தோள்பட்டை வரையிலான தலைமுடியும் கொண்டவர்.
அவர் கடைசியாக சாம்பல் நிறச் சட்டை மற்றும் பிங்க் நிற ‘ஹலோ கிட்டி‘ (Hello Kitty) பிஜாமா அணிந்திருந்தார்.
14 வயது அலியா (Aliyah) ஐந்து அடி ஆறு அங்குல உயரமும், பருமனான உடலமைப்பும், கருப்பு நிறத் தலைமுடியும் கொண்டவர்.
அவர் மண்டை ஓட்டு உருவம் பொறித்த கருப்பு நிற ஸ்வெட்டர் மற்றும் பிங்க் நிற பிஜாமா அணிந்திருந்தார்.
இந்தச் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்துப் பொலிஸார் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாகத் றொரண்டோ பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










