ஸ்கார்பாரோவில் சோகம் – ஈஸ்டர் ஞாயிறு விபத்தில் 21 வயது இளைஞன் பலி!

toronto.citynews.ca

கனடாவின் ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்தில் 21 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓக்ரிட்ஜ் (Oakridge) சுற்றுப்புறத்தில் உள்ள டேன் போர்த் அவென்யூ (Danforth Avenue) மற்றும் பைங் அவென்யூ (Byng Avenue) சந்திப்பிற்கு அருகில் நேற்று மாலை 3 மணிக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலைவு ஒன்றில் திரும்பிக்கொண்டிருந்த SUV ரக வாகனம் ஒன்று மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதியுள்ளது.

பலத்த காயமடைந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய SUV வாகனத்தின் ஓட்டுநர் அவ்விடத்திலேயே தங்கியிருந்ததுடன், பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

ஈஸ்டர் விடுமுறை தினத்தில் இடம்பெற்ற இந்த உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Previous articleடொராண்டோவில் கனமழை எச்சரிக்கை – 40 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு!
Next articleமகன் இழந்த துயரிலும் மற்றுமொரு குடும்பத்திற்காக தேடல் – கேப் பிரெட்டனில் (Cape Breton) நெகிழ்ச்சிச் சம்பவம்!