மகன் இழந்த துயரிலும் மற்றுமொரு குடும்பத்திற்காக தேடல் – கேப் பிரெட்டனில் (Cape Breton) நெகிழ்ச்சிச் சம்பவம்!

நோவா ஸ்கோடியாவின் கேப் பிரெட்டன் (Cape Breton) பகுதியில் கடந்த மார்ச் 26 முதல் காணாமல் போயுள்ள 30 வயது இளைஞன் கொன்னர் மெக்டொனால்டை (Connor MacDonald) தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணியில், தன் மகனைப் பறிகொடுத்த தந்தை ஒருவர் இணைந்துள்ளமை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

சிட்னி (Sydney) நகரைச் சேர்ந்த கென் மெக்டொனால்ட் (Ken MacDonald) என்பவரே, தனது நண்பருடன் இணைந்து மொரிசன் வீதி (Morrison Road) காட்டுப்பகுதிகளில் இந்தத் தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வருகிறார்.

கென் மெக்டொனால்டின் மகன் ஜஸ்டின் மெக்டொனால்ட் (Justin MacDonald) கடந்த 2024-ல் காணாமல் போய், ஓராண்டிற்குப் பிறகு 2025 மே மாதம் சடலமாக மீட்கப்பட்டார்.

அந்த ஆறாத வடுவோடு, தற்போது காணாமல் போயுள்ள கொன்னரின் குடும்பத்திற்கு உதவ அவர் முன்வந்துள்ளார்.

“இந்தத் துயரத்தை விவரிக்க முடியாது, இது ஒருபோதும் ஆறாத வடு” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் பெய்த கடும் பனிப்பொழிவு தேடுதல் பணியைச் சவாலானதாக மாற்றியுள்ளது.

காணாமல் போன கொன்னரின் ட்ரக் வண்டி மொரிசன் வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளின் கண்காணிப்பு கெமராக்கள் மற்றும் தோப்புப் பகுதிகளைச் சோதிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்த தகவல் தெரிந்தவர்கள் கேப் பிரெட்டன் பிராந்திய பொலிஸ் சேவையை (Cape Breton Regional Police Service) 902-563-5151 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

Video thumbnail
13,000 பேர் நடுவே நடந்த துப்பாக்கிச் சூடு — ஒரு மாதத்திற்குப் பிறகு முக்கிய திருப்பம்!
00:36
Video thumbnail
15 வயது சிறுவனுக்கு U.S. Consulate மீது துப்பாக்கிச் சூடு நடத்த பணம் கொடுக்கப்பட்டதா?
01:45
Video thumbnail
Toronto-வின் Danforth இந்த வார இறுதியில் மக்கள் கடலாக மாறப்போகிறது!
01:12
Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05

Related Articles

Latest Articles