டொராண்டோவில் கனமழை எச்சரிக்கை – 40 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு!

டொராண்டோ (Toronto) மற்றும் (GTA) பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) மஞ்சள் நிற மழை எச்சரிக்கையை (Yellow rainfall warning) விடுத்துள்ளது.

சனிக்கிழமை பெய்யவுள்ள மழையின் அளவு 20 முதல் 40 மில்லிமீற்றர் வரை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொலராடோ (Colorado) பகுதியிலிருந்து நகரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் மற்றும் வாய்க்கால்களுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தெற்கு ஒன்டாரியோவின் லண்டன் (London) முதல் ஒட்டாவா (Ottawa) வரையான பகுதிகளிலும் இத்தகைய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை 21 பாகை செல்சியஸ் வெப்பநிலையுடன் இதமான வானிலை நிலவிய போதிலும், நாளை ஈஸ்டர் ஞாயிறு (Easter Sunday) அன்று வெப்பநிலை 6 பாகை செல்சியஸாகக் குறையும்.

அதேபோல், திங்கட்கிழமை வெப்பநிலை மேலும் சரிந்து 3 பாகை செல்சியஸாகப் பதிவாகும் என்பதால் குளிரான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் பனித்துளிகள் (Flurries) விழவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் கனமழை - வீதிகளில் நீர் தேக்கம், சாரதிகளுக்கு எச்சரிக்கை!
01:12
Video thumbnail
ரெஜினாவில் (Regina) நள்ளிரவில் தீ வைப்பு - பாதுகாப்பு கெமராவில் பதிவான அதிர்ச்சி காட்சி!
01:05
Video thumbnail
பிராம்ப்டனில் கோர விபத்து - எஸ்.யு.வி கார் லொரியின் அடியில் சிக்கி நபர் பலி!
01:02
Video thumbnail
ஒன்ராறியோவில் பல பில்லியன் டொலர் செலவில் சிறை கொள்ளளவை அதிகரிக்க திட்டம்!
01:25

Related Articles

Latest Articles