HelloFresh உணவுப் பொதிகளில் உள்ள சீஸ் (Cheese) தயாரிப்புகள் மீளழைப்பு!

கனடா முழுவதும் விநியோகிக்கப்படும் HelloFresh மெயில் கிட் (Meal-kit) உணவுப் பொதிகளில் உள்ள சில சீஸ் தயாரிப்புகள் மீள அழைக்கப்பட்டுள்ளன.

அவற்றில்  உயிருக்கு ஆபத்தான Listeria monocytogenes பக்டீரியா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவை சந்தையிலிருந்து மீளழைக்கப்பட்டுள்ளன.

கனடிய உணவு ஆய்வு முகவரகம் (CFIA) திங்கட்கிழமை இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்த மீளழைப்பில் Shredded parmesan, Cheese curds, Feta, Goat cheese மற்றும் Mozzarella ஆகிய ஐந்து வகையான சீஸ் தயாரிப்புகள் உள்ளடங்கியுள்ளன.

இவை 28 கிராம் முதல் 170 கிராம் வரையிலான சிறிய பொதிகளில் (Unbranded portions) வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை எவருக்கும் பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

இருப்பினும், இத்தகைய பாக்டீரியா தொற்றுகள் கொண்ட உணவுகள் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் கடும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இந்தத் தொற்று கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் தசைவலியை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, உங்கள் வசதிக்காக வாங்கப்பட்ட HelloFresh உணவுப் பொதிகளில் உள்ள சீஸ் வகைகளைச் சரிபார்த்து, சந்தேகம் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அல்லது பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Video thumbnail
ஒருவரின் கணினியிலிருந்து ஆரம்பித்த தாக்குதல்! 165 நிறுவனங்களையும் 100 மில்லியன் மக்களையும் பாதித்ததா
01:57
Video thumbnail
Metrolinx முதல் LCBO வரை — ஒன்ராறியோவின் 8 முக்கிய பொது நிறுவனங்கள் அரசின் ஆய்வுக்குள்!
01:10
Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00

Related Articles

Latest Articles