அமெரிக்க எல்லையில் அதிரடி – கனடியரிடம் கட்டாயப்படுத்தி பெறப்பட்ட (DNA) மாதிரி – மக்கள் அதிர்ச்சி!

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற கெவின் லார்சன் (Kevin Larson) என்ற கனடியர், எல்லையில் தடுத்து நிறுத்திய அமெரிக்க அதிகாரிகள் அவரிடமிருந்து கட்டாயத்தின் பேரில் தனது டி.என்.ஏ (DNA) மாதிரியை பெற்றுக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்டோபர்18 அன்று மிச்சிகனில் (Michigan) நடைபெறவிருந்த நோ கிங்ஸ்‘ (No Kings) எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளச் சென்றபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

எந்த விதமான குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில், சுமார் இரண்டரை மணிநேர விசாரணைக்குப் பின்பும் அவருக்கு, அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டி.என்.ஏ மாதிரியை வழங்காவிட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் மிரட்டியதாக லார்சன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் (Trump) நிர்வாகத்தின் சட்ட மாற்றங்களுக்கு எதிராக அமைதியான முறையில் குரல் கொடுக்கச் சென்ற தன்னை ஒரு அச்சுறுத்தலாகக் கருதியதை அவரால் நம்ப முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களான டெபி டிங்கெல் (Debbie Dingell) மற்றும் ஜேமி ராஸ்கின் (Jamie Raskin) ஆகியோர் உரிய துறைகளிடம் விளக்கம் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.

கனடாவைப் பிரிதொரு மாநிலமாக இணைப்போம் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், எல்லையில் கனடியர்கள் நடத்தப்படும் விதம் கவலைக்குரியது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கிடையில், ஓவன் சவுண்ட் (Owen Sound) பகுதியில் சனிக்கிழமை நடைபெறவுள்ள பேரணியில் கலந்துகொண்டு கனடாவின் இறையாண்மைக்காகக் குரல் கொடுக்க லார்சன் திட்டமிட்டுள்ளார்.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles