ஒரே வாரத்தில் கடும் குளிரும் திடீர் வெப்பமும் – டொராண்டோவில் ஊஞ்சலாடும் வானிலை!

டொராண்டோ (Toronto) மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (GTA) இந்த வாரம் வானிலை பெரும் மாற்றங்களைச் சந்திக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடும் குளிருடன் ஆரம்பமானாலும், பகலில் 5°C வரை வெப்பம் நிலவியது.

இன்று புதன்கிழமை மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், மழையோ அல்லது பனித்தூவலோ (Flurries) பெய்ய வாய்ப்புள்ளது என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த வாரத்தின் வியாழக்கிழமை மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், அன்றைய தினம் வெப்பம் திடீரென 12°C முதல் 13°C வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும், அன்றைய தினம் மாலை வேளையில் பலத்த மழையுடன் கூடிய குளிர் காற்று வீசக்கூடும் என்பதால், வாகனப் போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளிக்கிழமை மீண்டும் வெப்பநிலை 0°C க்குக் கீழ் குறைந்து கடும் குளிர் நிலவும் என்றும், வார இறுதியில் மீண்டும் வசந்த காலத்துக்கு நிகரான இதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வாரம் முழுவதும் நிலவும் இந்த “ரோலர்கோஸ்டர்” (Rollercoaster) போன்ற வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப மக்கள் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles