மார்க் கார்னி – டேனியல் ஸ்மித் எரிசக்தி ஒப்பந்தம்: காலக்கெடுவை எட்டுவதில் சிக்கல்!

www.cbc.ca

கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் ஆல்பெர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் (Danielle Smith) ஆகியோருக்கு இடையே எட்டப்பட்ட எரிசக்தி மற்றும் காலநிலை ஒப்பந்தத்தின் முதற்கட்ட இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டிய சில முக்கிய இணக்கப்பாடுகள், பேச்சுவார்த்தைகளில் நிலவும் இழுபறி காரணமாகத் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக முதல்வர் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை கார்பன் வரி மற்றும் ‘பாத்வேஸ்‘ (Pathways) கார்பன் சேமிப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தங்களை எட்டுவதில் சவால்கள் இருப்பதையும் ஸ்மித்  ஒப்புக்கொண்டார். 

ஆல்பெர்ட்டாவிலிருந்து மேற்கு கடற்கரை வரை புதிய எண்ணெய் குழாய்த்திட்டத்தை அமைப்பதும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.

இந்தக் குழாய்த்திட்டத்தில் முதலீடு செய்ய ஆசிய அல்லது மத்திய கிழக்கு நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் இறையாண்மை நிதியங்கள் (Sovereign wealth funds) ஆர்வம் காட்டும் என ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Previous articleஒரே வாரத்தில் கடும் குளிரும் திடீர் வெப்பமும் – டொராண்டோவில் ஊஞ்சலாடும் வானிலை!
Next articleகனடாவில் சக மலையேற்ற வீராங்கனையை காப்பாற்ற முயன்ற சீன வீரர் பலி – குடும்பத்திற்கு குவிந்த மருத்துவக் கட்டணங்கள்!