GTA வில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உச்சத்தைத் தொடும்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் (GTA) எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் லீட்டருக்கு 7 சதங்களினால் (7 cents) அதிகரிக்கவுள்ளது.

இதன்படி, நாளை வெள்ளிக்கிழமை முதல் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 173.9 சதங்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல்கள் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் En-Pro நிறுவனத்தின் தலைமை பகுப்பாய்வாளர் ரோஜர் மெக்நைட் (Roger McKnight குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஏற்பட்டுள்ள தடைகள் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு காணப்படும் மிக உயர்ந்த விலை இதுவாகும்.

போர் உடனடியாக முடிவுக்கு வந்தாலும், எரிபொருள் விலை பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில மாதங்கள் எடுக்கும் என குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் (Queen’s University) எரிசக்தி கொள்கை ஆய்வாளர் வார்ரன் மேபி (Warren Mabee) தெரிவித்துள்ளார்.

Video thumbnail
றொரண்டோவில் வாடகை செலுத்த முடியாமல் திணறும் மக்களுக்கு நல்ல செய்தியா?
01:27
Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48

Related Articles

Latest Articles