அமெரிக்காவுடனான வர்த்தகப் போர்  – கனடா வசமுள்ள துருப்புச் சீட்டுகள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) விதித்துள்ள இறக்குமதி வரிகளை (Tariffs) எதிர்கொள்ளவும், புதிய வர்த்தக ஒப்பந்தங்களை எட்டவும் கனடா சில வலுவான காரணிகளைத் தனது பிடியில் வைத்துள்ளது.

அமெரிக்கா தனது எரிசக்தி தேவையில் பெரும்பகுதியை கனடாவையே நம்பியுள்ளது. குறிப்பாக, ஈரானுடனான போரினால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், கனடாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிற்கு மிக அவசியமானது.

கனடிய ஓய்வூதிய நிதியங்கள் (Pension Funds) அமெரிக்கத் தொழில்துறையில் சுமார் 733 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளன. இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் கனடாவின் செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது.

அதேபோல் சீனாவை எதிர்க்க அமெரிக்காவிற்குத் தேவைப்படும் முக்கிய தாதுக்களின் சுரங்க மையமாக கனடா திகழ்கிறது.

இதனை ஒரு பேரம் பேசும் கருவியாக (Bargaining chip) கனடா பயன்படுத்த வாய்ப்புள்ளது.

அமெரிக்காவின் 88 F-35 போர் விமானங்களை வாங்கும் 28 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை கனடா மறுபரிசீலனை செய்யக்கூடும் என்ற எதிர்வுகூறல்கள் காணப்படுகின்றன.

வரிகளை நீக்கினால் மட்டுமே இந்த ஒப்பந்தம் முழுமையடையும் என கனடா நிபந்தனை விதிக்கலாம்.

மேலும், கனடா சீனாவுடன் சில வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வது, அமெரிக்காவிற்கு ஒரு எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் வரப்போகும் இடைக்காலத் தேர்தல்கள் மற்றும் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணிகளும் கனடாவிற்குச் சாதகமாக அமையக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles