கனடாவில் குளிர் காலம் முடிவுக்கு வரவில்லை – வாரம் முழுதும் பனிப்பொழிவு தொடரும் – ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணம் மற்றும் மெரிடைம்ஸ் (Maritimes) பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீசிய அதிவேகக் காற்று காரணமாக மின்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றினால், கியூபெக்கில் மட்டும் ஒரு கட்டத்தில் 3,10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மின்சாரமின்றித் தவித்தனர்.

குறிப்பாக Laurentians, Lanaudière மற்றும் Montérégie ஆகிய பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மின்கம்பங்கள் முறிந்தும், மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்தும் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்க 1,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை Hydro-Québec களமிறக்கியுள்ளது.

இதேபோல் ஒன்ராறியோவின் Ottawa மற்றும் மெரிடைம்ஸ் பகுதிகளான Nova Scotia, New Brunswick ஆகியவற்றிலும் ஆயிரக்கணக்கானோர் மின்தடைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

கடுங்குளிர் மற்றும் காற்று காரணமாக மொன்றியலில் உள்ள Ecomuseum Zoo பூங்காவில் வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் ‘Genie’ என்ற கரடியின் நிகழ்வும் ஒத்திவைக்கப்பட்டது.

வாரம் முழுவதும் பனிப்பொழிவு தொடரும் என்பதால், “குளிர் காலம் இன்னும் முடியவில்லை” என Environment Canada வானிலை ஆய்வாளர் Simon Legault எச்சரித்துள்ளார்.

Video thumbnail
ஒரே வாரத்தில் ஓராண்டு மழையின் நான்கில் ஒரு பங்கு!
00:49
Video thumbnail
ஐந்து நிமிடங்களில் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை!
01:07
Video thumbnail
Metro Vancouver முழுவதையும் சூழ்ந்த காட்டுத்தீப் புகை!
01:28
Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03

Related Articles

Latest Articles