டொராண்டோவில் 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

டொராண்டோ (Toronto) நகரில் திங்கட்கிழமை மதியம் முதல் பலத்த காற்று வீசக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா (Environment Canada) சிறப்பு வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குளிர்ச்சியான காற்றோட்டத்தின் (Cold front) நகர்வு காரணமாக, திங்கட்கிழமை பிற்பகல் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழ வாய்ப்புள்ளதோடு, ஆங்காங்கே மின்சாரத் தடைகளும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மழை மற்றும் 13 டிகிரி செல்சியஸ் என்ற மிதமான வெப்பநிலை நிலவினாலும், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வெப்பநிலை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை காலை –19 டிகிரி செல்சியஸ் போன்ற கடும் குளிர் நிலவக்கூடும் என்பதோடு, பனிப்பொழிவுக்கும் வாய்ப்புள்ளது.

புதன்கிழமை –2 டிகிரி செல்சியஸ் வரை குளிர் நீடிக்கும் நிலையில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீண்டும் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக உயரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles