நிறவெறிப் பேச்சு: டொராண்டோ கத்தோலிக்க சபை ஆசிரியர்கள் இருவர் அதிரடியாக நீக்கம்!

டொராண்டோ கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபையைச் (TCDSB) சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நிறவெறி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நோர்த் யோர்க் (North York) பகுதியில் உள்ள James Cardinal McGuigan Catholic Secondary School இல் பணியாற்றிய இந்த ஆசிரியர்கள், மாணவர்களும் பார்க்கக்கூடிய ஒரு இன்ஸ்டாகிராம் குழுவில் கறுப்பினத்தவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், இனவாத வார்த்தைகளைப் பயன்படுத்தியும் உரையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த கிறிஸ்மஸ் விடுமுறையின் போது இடம்பெற்ற இந்த உரையாடல்களை மாணவர் ஒருவர் ஆதாரத்துடன் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த ஆசிரியர்கள் விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தாலும், தற்போது அவர்கள் பணியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளதை சபை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக ஒன்ராறியோ ஆசிரியர்கள் கல்லூரி (Ontario College of Teachers) மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் சமத்துவமான சூழலை உறுதி செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக பாடசாலை சபை தெரிவித்துள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles