கனடாவின் Saskatchewan மற்றும் Ontario மாகாணங்களில் பணியாற்றிய மருத்துவர் David Edward-Ooi Poon மீது 28 புதிய பாலியல் குற்றச்சாட்டுகளைப் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் அவர் எதிர்கொள்ளும் மொத்த குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், 2009-ஆம் ஆண்டு அவர் University of Alberta-வில் மருத்துவ மாணவராக இருந்த காலப்பகுதியில் நடந்த பாலியல் அத்துமீறல்கள், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லைகள் மற்றும் சிறார் பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகளை வைத்திருந்தமை போன்றவை அடங்கும்.
அமெரிக்காவின் Google நிறுவனம் வழங்கிய ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்த மருத்துவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு நீண்ட கால விசாரணையாக அமையக்கூடும் என சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.










