Ontario-வில் அரங்கேறும் போலி விபத்து மோசடிகள் 400 சதவீத அதிகரிப்பு – காப்புறுதி நிறுவனங்கள் அதிர்ச்சி!

கனடாவின் Ontario மாகாணத்தில், திட்டமிடப்பட்டு நடத்தப்படும் போலி வாகன விபத்துக்கள்‘ (Staged Collisions) மூலம் காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றும் கும்பல்களின் அட்டகாசம் 2025-ஆம் ஆண்டில் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Peel Regional Police மேற்கொண்ட Project Outsource என்ற அதிரடி நடவடிக்கையின் மூலம், சுமார் $4.2 மில்லியன் டாலர் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்து மோசடிகளில் இழுவை வாகன நிறுவனங்கள் (Tow truck companies), மருத்துவ மையங்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் என ஒரு பெரிய வலையமைப்பே இணைந்து செயல்படுவதாகக் Peel பிராந்திய பொலிச் தலைமை அதிகாரி Nishan Duraiappah தெரிவித்துள்ளார்.

Aviva, Intact போன்ற முன்னணி 10 காப்புறுதி நிறுவனங்கள் இந்த தாமி குற்றக் கும்பலால்‘ (Dhami Criminal Organization) ஏமாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாகனத் திருட்டுகள் குறைந்திருந்தாலும், இத்தகைய காப்புறுதி மோசடிகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் பெரும் இலாபம் ஈட்டுவதாகப் புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.

இது குறித்து மாகாண நிதி அமைச்சர் Peter Bethlenfalvy கருத்துத் தெரிவிக்கையில், இத்தகைய மோசடிக்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Image – CP24

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles