கனடாவின் St. Clair நதியில் எண்ணெய்க் கசிவு: Suncor நிறுவனம் அவசர நடவடிக்கை!

கனடாவின் Sarnia பகுதியில் உள்ள St. Clair நதியில் ஏற்பட்ட ஹைட்ரோகார்பன் (Hydrocarbon) எண்ணெய்க் கசிவு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக Suncor நிறுவனம் அறிவித்துள்ளது.

புதன்கிழமை மாலை 6 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான கண்காணிப்பின் போது, நதியின் மேற்பரப்பில் எண்ணெய்ப் படலம் காணப்படுவது கண்டறியப்பட்டது.

உடனடியாகச் செயற்பட்ட நிறுவனத்தினர், கசிவு ஏற்படும் இடத்தை அடையாளம் கண்டு அதனைத் தடுத்துள்ளனர்.

துப்புரவுப் பணிகளுக்காக Eastern Canada Response Corporation-இன் உதவியுடன் சிறப்பு உபகரணங்கள் மற்றும் ‘பூம்’ (Booms) கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எவ்வளவு அளவிலான எண்ணெய் கசிந்தது என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து உரிய அரச முகவர் அமைப்புகளுக்கும், உள்ளூர் அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக Suncor ஊடகப் பேச்சாளர் Christine Randall தெரிவித்துள்ளார்.

1952 முதல் இயங்கி வரும் இந்த சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு சுமார் 85,000 பேரல் கச்சா எண்ணய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Image – CBC

Video thumbnail
எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க நபர் தற்கொலை!
01:15
Video thumbnail
ஒன்ராறியோவில் உயர்கல்வி புரட்சி - 6.4 பில்லியன் டொலர் வரலாற்றுச் சிறப்புமிக்க நிதி ஒதுக்கீடு!
01:34
Video thumbnail
றொரண்டோ TTC பேருந்தில் தாக்குதல் - சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்!
00:38
Video thumbnail
றொரண்டோவின் புதிய EDGE ஊக்கத் திட்டம் - முதல் பயனாளியாக நோர்த் யோர்க் நிறுவனம் தெரிவு!
01:09
Video thumbnail
கனடாவில் சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மற்றும் ஏ.ஐ (AI) தடை? லிபரல் கட்சி விவாதம்!
01:21
Video thumbnail
கனடாவில் எரிபொருள் விலை குறைப்பு - மத்திய அரசின் எரிபொருள் வரி 5 மாதங்களுக்கு நிறுத்தம்!
01:25
Video thumbnail
ஒன்ராறியோ சிறைச்சாலைகளில் குளறுபடி - ஒவ்வொரு ஆண்டும் பெருமளவான கணக்கான கைதிகள் தவறுதலாக விடுதலை!
01:10
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:15
Video thumbnail
டொனால்ட் ட்ரம்ப் - பாப்பரசர் மோதல் - செயற்கை நுண்ணறிவுப் படத்தைப் பகிர்ந்து ட்ரம்ப் பரபரப்பு!
01:07
Video thumbnail
38,000 கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி – சாதனை செய்தது வான்கூவர்!
01:10

Related Articles

Latest Articles