ஈரான் போர் விவகாரம் – கனடா நாடாளுமன்றத்தில் அவசர விவாதம்!

ஈரானில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் தாக்கம் குறித்து விவாதிக்க, பிரதமர் Mark Carney தலைமையிலான லிபரல் அரசு திங்கட்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக சபைத்தலைவர் (House Leader) Steven MacKinnon வெளியிட்டுள்ள தகவலில், ஈரானில் நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் அங்குள்ள கனடியர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து விவாதிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அண்மையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் கனடா பங்கேற்கவில்லை என்றும், அது குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் பிரதமர் அலுவலகம் (PMO) தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், கடந்த பிப்ரவரி 28 அன்று இத்தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் Mark Carney-யின் நிலைப்பாட்டிற்கு அவரது கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்துள்ளது.

இடைக்கால NDP தலைவர் Don Davies இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் Donald Trump உடன் பிரதமர் Mark Carney தொலைபேசியில் உரையாடியதோடு, மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கவும் கனடியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles