Toronto பொலிஸ் பெயரில் மோசடி – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

டொராண்டோ பொலிஸ் சேவையின் (Toronto Police Service – TPS) உத்தியோகபூர்வ தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி, பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுவதாக பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், உங்களது பெயரைக் குறிப்பிட்டு தாம் பொலிஸ் அதிகாரி என அறிமுகப்படுத்துவதோடு, ஏதோ ஒரு மோசடி விசாரணைக்காகப் பணம் செலுத்துமாறு கோருகின்றனர்.

இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதனால், Toronto Police Service ஒருபோதும் தொலைபேசி வாயிலாகப் பணம் கோர மாட்டார்கள் என்பதால், தனிப்பட்ட விபரங்கள், வங்கி விபரங்கள் அல்லது கடவுச்சீட்டு (Passport) பிரதிகளை எவருக்கும் பகிர வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில் கிரிப்டோகரன்சி (Cryptocurrency) உள்ளிட்ட எந்த வகையிலும் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தவறுதலாக விபரங்களை வழங்கியிருந்தால், உடனடியாக TransUnion Canada அல்லது Equifax போன்ற கடன் முகமைகளைத் தொடர்புகொண்டு உங்கள் கணக்குகளைக் கண்காணிக்குமாறும் பொலிசார் அறிவித்துள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 416-808-1400 என்ற எண் பொலிசாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles