மிசிசாகாவில் துப்பாக்கிகளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

கனடா, Mississauga நகரில் வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையின் போது, சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூன்று இளைஞர்களை பீல் பிராந்திய பொலிசார் (Peel Regional Police) கைது செய்துள்ளனர்.

Bristol Road West மற்றும் Creditview Road சந்திப்புக்கு அருகே இரவு 10:15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கஞ்சா கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வாகனத்தில் இருந்தவர்களை பொலிசார் சோதனையிட்டபோது, ஒருவர் தப்பியோட முயன்றார்.

அவரைத் துரத்திப் பிடித்த பொலிஸார், அவரிடமிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட சட்டவிரோத கைத்துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவத்தில் பிராம்ப்டனைச் சேர்ந்த Malik Laroche (18), Jedidiah Henry (19) மற்றும் மிசிசாகாவைச் சேர்ந்த David Eze (22) ஆகிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது ஆயுதங்கள் வைத்திருந்தமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களில் David Eze மீது வாகனத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டும் மேலதிகமாகச் சுமத்தப்பட்டுள்ளது.

Imgage – https://status/2030387272126775421?s=20X – Chief Nishan Duraiappah 

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles