Torontoவில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 8 வயதுச் சிறுமி Aviannah பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (March 6, 2026) மதியம் 12:40 மணியளவில், Spadina Avenue மற்றும் Dundas Street West பகுதியில் குறித்த சிறுமி இறுதியாக இருந்துள்ளார் காணப்பட்டார்.
சிறுமி அவரது தாயாரால் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்த Toronto பொலிசார், சிறுமியின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலை வெளியிட்டிருந்தது.
தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய புலனாய்வாளர்கள், சனிக்கிழமை காலை சிறுமி கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
எனினும், அவர் எங்கே, எப்படி மீட்கப்பட்டார் என்பது குறித்த மேலதிக விபரங்களை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.
