கனடாவில் சீன மின்சார வாகனங்கள் – மலிவு விலை கார்களுக்கு காத்திருப்பு!

கனடாவின் வாகனச் சந்தை மார்ச் 1 முதல் சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களுக்கு (EV) உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், BYD அல்லது Chery போன்ற குறைந்த விலை சீனத் தயாரிப்புகள் உடனடியாக கனடிய சாலைகளுக்கு வராது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரம்பத்தில், சீனாவில் ஏற்கனவே தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள Tesla, Volvo மற்றும் Polestar போன்ற நன்கு அறியப்பட்ட பிராண்டுகளே முதலில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் Mark Carney அறிவித்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஆண்டுக்கு 49,000 வாகனங்கள் மட்டுமே 6.1 சதவீத வரி விகிதத்தில் அனுமதிக்கப்படும்.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினால், சீன நிறுவனங்கள் அதிக இலாபம் தரக்கூடிய விலையுயர்ந்த மாடல்களை ஏற்றுமதி செய்யவே முன்னுரிமை அளிக்கும் என University of Windsor பேராசிரியர் Peter Frise சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புதிய நிறுவனங்கள் கனடாவின் பாதுகாப்புத் தரச் சான்றிதழ்களைப் (Motor Vehicle Safety Act) பெறுவதற்குச் சில மாதங்கள் வரை ஆகலாம் என்பதால், புதிய சீன பிராண்டுகள் எதிர்வரும் கோடைகாலத்திற்கு பின்னரே விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

Related Articles

Latest Articles