GTHA பகுதியில் கனமழை மற்றும் அடர் மூடுபனி – சிறப்பு வானிலை எச்சரிக்கை!

Greater Toronto Area (GTA) மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த மழை, இடியுடன் கூடிய மின்னல் மற்றும் அடர் மூடுபனி நிலவக்கூடும் என Environment Canada சிறப்பு வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Toronto, Peel, Durham மற்றும் Halton ஆகிய பிராந்தியங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரை சுமார் 15 முதல் 25 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவும் மிதமான வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகி மேலதிக நீர் ஓட்டம் ஏற்பட வாய்ப்புள்ளன.

தரைப்பகுதி இன்னும் உறைந்த நிலையில் இருப்பதால் ஆங்காங்கே நீர் தேங்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Northern York பிராந்தியத்தில் 40 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் அங்கு மழைக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், Toronto, Brampton, Mississauga, Hamilton உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு அடர் மூடுபனி நிலவக்கூடும் என எதிர்வுகூறப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை தெளிவான வானிலையுடன் 10°C ஆக பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles