கனடா பிரதமர் Mark Carney, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்திரேலியா (Australia) சென்றடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நண்பகல் சிட்னி (Sydney) நகரை சென்றடைந்த அவர், அங்குள்ள முக்கிய வணிகத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக, புதன்கிழமை Lowy Institute சிந்தனைக் குழுவிலும், அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்.
மேலும், இந்த வார இறுதியில் ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese உடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, ஆர்க்டிக் (Arctic) பகுதியில் பயன்படுத்துவதற்காக ஆஸ்திரேலியாவிடமிருந்து ரேடார் அமைப்பை வாங்குவதற்கு கனடா ஒப்பந்தம் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
