இணையத்தில் அன்புவார்த்தை பேசி, காதலில் சிக்க வைத்து இருவரிடமிருந்து 610,000 டொலர்களை மோசடி செய்த நபர் ஒருவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
டொராண்டோவைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இணையத்தில் இரண்டு பெண்களுடன் அன்புவார்த்தை பேசி பழகியுள்ளதுடன் தான் மத்திய கிழக்கில் எண்ணெய் நிறுவனம் ஒன்றை வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், விரைவில் திருப்பித் தருவதாகவும் கூறி குறித்த இருவரிடம் 610,000 டொலர்களைப் பெற்றுள்ளார்.
ஏமாற்றப்பட்ட இருவரும் குறித்த நபரை ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை என்றும் பணத்தை இழந்த பின்னர் தாம் குறித்த இளைஞன் மாயமாகிவிட்ட பின்னர் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, பின்னர் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் 2023ஆம் ஆண்டில் இதே முறையில் $250,000 மோசடி செய்த வழக்கிலும் கைது செய்துசெய்யப்பட்டிருந்தாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரினால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு எவரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தகவல் வழங்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.