பொய்யான வாகன விபத்துகளை ஏற்படுத்தி காப்பீடு பெற்ற மோசடி அம்பலம்! மூவர் கைது!

திட்டமிட்ட வகையில் வாகன விபத்துக்களை ஏற்படுத்தி காப்பீடு பெற்று மோசடி செய்த சம்பவங்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிசிசாகாவில் இரு கார் திருட்டு சம்பவங்கள் குறித்து பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பிராம்ப்டனில் உள்ள ஒரு கார் திருத்தும் சரிசெய்யும் நிலையத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பொய்யான வாகன விபத்துகளை ஏற்படுத்தி காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வாகனங்கள் திருடப்பட்டமை மற்றும் போலியாக காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி பணம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மூவரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

Related Articles

Latest Articles