மிசிசாகாவில் ஏற்பட்ட தொழிற்சாலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை 6:40 மணியளவில், கிம் பெல் தெரு மற்றும் ட்ரூ சாலையின் அருகே இடம்பெற்றுள்ளது.
வேலைத்தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 50 வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒண்டாரியோ தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தீயணைப்பு ஆய்வாளர் அலுவலகம் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.