சமூக வலைத்தளங்கள் ஊடாக சிறுவர்களை குறிவைத்து ஏமாற்றி, பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒருவர் சிறுவர்களை இணைய வழி தொடர்புகொண்டு ஆபாசப் படங்களைப் பெற்று, அவற்றை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மற்றைய நபர் சிறுவர்களை இணைய வழியில் தொடர்புகொண்டு ஆபாசப்படங்களைப் பரிமாறியுள்ளதுடன் சிறுவர்களை நேரில் சந்தித்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
24 மற்றும் 41 நபர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தனித்தனியாக இயங்கி வந்துள்ளதாகவும், இவர்களுக்கு தனித்தனியான வழங்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்களினால் பாதிக்கப்பட்ட வேறு எவரேனும் இருந்தால் பொலிசாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரியுள்ளனர்.
416-222-TIPS (8477)