அமெரிக்க – கனடா எல்லையின் Ambassador பாலம் அருகே, 154 கிலோகிராம் கோகைன் கடத்தல் முயற்சியை அமெரிக்க சுங்கத்துறையினர் முறியடித்துள்ளனர்.
சந்தேகத்துக்குரிய ஒரு வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதிகாரிகள் இந்த கடத்தலை முறியடித்துள்ளனர்.
வாகனத்தில் இருந்த போதைப்பொருளை முழுமையாக கைப்பற்றியதுடன் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதன்போது ஒரு இந்திய பிரஜை கைதுசெய்யப்பட்டுள்ளார்.