கனடாவில் கடத்தல், கொள்ளை: அமெரிக்காவில் துப்பாக்கி கடத்தி கைது

கனடாவில் தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கடத்திய பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைதாகியுள்ளார்.

இந்த நபர் 20 மில்லியன் டொலர் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இருந்து பணம் மற்றும் வெளிநாட்டுப் பணம் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது.

சுவிசர்லாந்தில் இருந்து டோரண்டோவிற்கு வந்த விமானத்தில் இந்த பொருட்கள் கடத்தப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து குறித்த நபர் இந்த பொருட்களை வெளியே கடத்திச் சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னர் குறித்த நபர் தலைமறைவானதாகவும், குறித்த நபர் அமெரிக்காவின் பென்ஸில்வேனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் அமெரிக்காவில் ஓட்டிய வாடகை காரில் 65 துப்பாக்கிகள் இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிகளைக் கடத்த தான் ஒப்பந்தம் செய்துகொண்டதாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனைக் கிடைக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles