Toronto Metropolitan University வளாகத்தில் இன்று பிற்பகல் காரைக் கொண்டு மோதியதில் வளாகத்தில் அமர்ந்திருந்த நால்வர் காயமடைந்துள்ளனர். மோதிய பின்னர் தப்பிச் சென்ற 23 வயது நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நால்வரில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த நபர் திட்டமிட்டு குறித்த விபத்தை மேற்கொண்டுள்ளதாகவும் இவரைப் பார்த்தால் யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.