கனடா, மெக்சிக்கோ வாகன வரி! பின்வாங்கும் டொனால்ட் ட்ரம்ப்

கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் வாகன உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை தற்காலிகமாக ஒத்திவைக்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் அமெரிக்காவில் உற்பத்திகளை மேற்கொள்ள விரும்புவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு சிறிது கால அவகாசம் தேவை என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடா, மெக்சிக்கோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன பொருட்களுக்கு 25% வரியை விதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பெருமளவு வரியை விதிப்பதாக இம்மாத முற்பகுதியில் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனால் உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதுடன் பங்குச் சந்தைகள் பலவும் சரிவைக் கண்டன.

இந்த நிலையில், கனடா, மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உற்பத்திப் பொருட்களுக்கான வரியை தற்காலிகமாக ஒத்திவைக்க முடியும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles