ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஹைவே 401இல் இன்று திங்கட்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானதுடன் இரண்டு வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
Meadowvale வீதிக்கு அருகே மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வாகனம் பாதுகாப்புத் தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்தில் வாகனத்தை செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
78 வயதான முதியவர் மற்றும் 2 வயது குழந்தை ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை என்றும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்தினால் குறித்த சாலை பிற்பகல் 3 மணி வரை மூடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.