கனடாவில் கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு சுமார் 570 மில்லியன் டொலர் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலக தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலுன் ஒப்பிடும் இந்தத் தொகை சற்று குறைவு என அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
கனடாவின் 45ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலுக்கு 250,000 ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் நாயகத்தை சந்தித்த பிரதமர் மார்க் கானி, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்தார். அத்துடன், பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை மார்க் கானி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.