சிறார் மீது பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு! ஒருவர் கைது!

நோர்த் யார்க்கில் சிகை அலங்கார விற்பன்னர் மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு!

நோர்த் யார்க்கில் (North York) உள்ள ஒரு சிகை அலங்கார நிலைய உரிமையாளர் மற்றும் சிகை அலங்கார விற்பன்னர், இரண்டு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள 60 வயதான நபர் கடந்த 8ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

2023ஆம் ஆண்டு முதல் குறித்த நபர், சிறுவர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், இந்த நபரினால் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தகவல் தருமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

 

Related Articles

Latest Articles