டொரண்டோவில் ஆயிரக்கணக்கான வாடகை வீடுகளை புதிதாக நிர்மாணிப்பதற்கு உதவ கனடிய பெடரல் அரசாங்கம் 2.55 பில்லியன் டொலர்கள் நிதியுதவியை குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கவுள்ளது.
இது வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் முக்கியமான ஒப்பந்தம் என மேயர் ஒலிவியா சொவ் (Olivia Chow) தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவி, நகரில் 7 புதிய வாடகை வீடுகள் திட்டத்தை மேம்படுத்த உதவும் என்றும் இதன் மூலம் மொத்தம் 4,831 புதிய வாடகை வீடுகள் நிர்மாணிக்கப்படுடும் என்றும் இதில் 1,075 வீடுகள் குறைந்த வாடகை வீடுகளாக இருக்கும் என்றும் மேயர் ஒலிவியா தெரிவித்தார்.
உயர் வட்டி விகிதத்தால் கடந்த சில ஆண்டுகளாக டொரண்டோவில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.
தற்போது இந்த மத்திய அரசின் ஒப்பந்தம் புதிய வீடுகளை வேகமாக கட்டிக்கொடுக்க வழிவகுக்கும் என மேயர் ஒலிவியா தெரிவித்தார்.