கனடாவின் 24வது பிரதமராக Mark Carney பதவியேற்றுக்கொண்டார்.
“நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படும் அரசாங்கம். உடனடியாக பணியை தொடங்குவோம்” என்று அவர் பதவியேற்பு விழாவுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதன்பின்னர் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட Mark Carney புதிய அமைச்சரவையையும் அறிவித்தார்.
இதில்
Gary Anandasangaree நீதியமைச்சராக பதவி ஏற்கிறார்.
இதனைத் தவிர,
Francois-Philippe Champagne நிதியமைச்சராகவும்,
Melanie Joly வெளியுறவுத் துறை அமைச்சராகவும்,
Chrystia Freeland போக்குவரத்துத் துறை அமைச்சராகவும்,
Kamal Khera சுகாதார துறை அமைச்சராகவும், நியமனம் பெற்றுள்ளனர்.
Carney தனது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 24ஆக வரையறுத்துள்ளார்.